Skip to main content

கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள், வண்டலூர் - வாலாஜாபாத் மேம்பாலங்கள் பணி: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

 கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மேம்பாலம், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலங்கள் பணியை பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:





இன்று (15.12.2021) காலை 8.30 மணியளவில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பால பணிகளை துவக்கி வைத்தார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது: கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே இருப்புப் பாதை கடவு எண்.47க்கு பதிலாக ரூ.90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30-மாதக் காலத்திற்குள் நிறைவடையும்.


இந்த ரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஓரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணி ரூ.26.64 கோடி மதிப்பீட்டில் 18-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த பல்லடுக்கு மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், படப்பை, ஓரகடம் செல்லும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும்.


ஓரகடம் தொழிற்பேட்டைக்கு, தென் தமிழ்நாட்டிலிருந்து மூலம் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த இரண்டு பாலங்களால் காலதாமதமின்றி விரைவில் சென்றடைய பேருதவியாக இருக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஸ்ரீ கணேசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர்."


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Urapakkam project 2021

  SM Enterprises  Building Construction Mobile Number:8883353252,9884677244 Our urapakkam site  900 sqft house 1BHK, for sqft rate ₹1999  Well construction 100% vasthu   CEMENT Branded cement for example Ultratech, Chettinadu, Coromandel, Maha, Priya. STEEL   ISI TMT BARS (ARS/GBR/KAMACHI)  Bricks Chamber Electricals item are ISI mark  Main Door View    Main Door    Main door first quality teak wood fully designed & varnished, main door best quality lock Kitchen Kitchen designed wall tile,  Kitchen platform marble  Hall Hall large space size 13×17.6 Pooja Room  Nice work pooja room designed wall tile  Front View points Front simply elevation nice look